செவ்வாய், 30 ஜூன், 2020

உதவ முடியாத உள்ளீடுகள்

வணக்கம். நீண்ட வருடங்களுக்குப் பின் இணையத்தில் இணைகிறேன். கொரோனா அளித்திருக்கும் இடைவெளி? என்னை இணையத்தில் இணைத்திருக்கிறது. உங்களையும் தான்.

என்னைப் போலவே நீங்களும் உங்களுக்கான வலைப்பக்கங்களை உருவாக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆமாம். இணையப் பக்கங்களில் உலா வரும் கோடிக்கணக்கான செய்திகளில் எத்தனை உண்மைகள் உள்ளன என்பதைச் சிந்தித்திருக்கிறீர்களா?

தமிழில் இணையத் தரவுகள் பெருகிவிட்டன. அதே நேரத்தில் தடுமாற்றங்களும் பெருகிவிட்டன. ஒரு தரவைப் பற்றிய தெளிவு கிடைப்பதற்கு மாற்றாகக் குழப்பம் பெருகினால், என்ன நடக்கும்? அரிதின் முயன்று  தேடி எடுக்க வேண்டிய நூல்கள் எளிதில் என் வீட்டுக் கணினித் திரையில் கிடைப்பது வரமே!. அதற்குப் பின்னால் எத்தனையோ தமிழ்-கணினி ஆர்வலர்களின் உழைப்பு ஒளிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த நன்றி! அப்படிக் கிடைப்பது என் சோம்பேறித் தனத்தை, என் மூளையின் வேலைத் திறனைக் குறைத்து விட்டால்? சிந்தியுங்கள் நண்பர்களே!

உலகம் உங்கள் வீட்டிற்குள் வந்திருப்பதால் தேவையற்ற இணைப்புகளில் திசை திரும்பாதீர்கள். ஒன்றைப் பற்றி ஓரகத்தே இரு என்பதை எண்ணுங்கள். தேவைக்கு இணையத்தைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் என்றேனும் ஒருநாள் இணையச் சேவையும் அரசின் பொதுப் பங்கீட்டுத் திட்டத்திற்கு மாற்றப்படக் கூடும். 

கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நேர்மையான புதிய தரமான ஆய்வுகளை முன்னெடுக்க முயற்சி செய்யுங்கள். இன்றேல், கல்வி தடம் புரண்டுவிடக் கூடும்.

கையில் கிடைத்த புதிய பொருளைக் குழந்தை, அடுத்து ஒன்று புதிதாகக் கிடைக்கும் வரை விடுவதில்லை. இப்போது இணையமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அதனை உங்களின் தரமான உள்ளீடுகள் என்ற சேவையால் மேம்படுத்துங்கள். விளையாட்டுப் பொருளாக மாற்றி விட்டீர்கள் என்றால் பயனற்றுப் போகும்.

உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடற்ற தரவுகளைத் தவிருங்கள். இணையமும் இதயமும் இணைந்தால் நாளை நமதாகும். நம் தமிழ் வசமாகும். இணையத்தின் பக்களில் இனி தொடர்ந்து இணைவோம்......










திங்கள், 19 பிப்ரவரி, 2018

கணினி சொல்லும் கதை

கணினி சொல்லும் கதை

                     இந்தக் கணினி இருக்கிறதே! மிகப் பெரிய வித்தைக்காரன். ஒரு பக்கம் காசாகக் கொட்டுவதற்கும் மறுபக்கம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கும் தெரிந்து வைத்திருக்கும் காலக்கடவுள். புராணங்களில் சொல்லப்படும் தேவனா? இல்லை அசுரனா? புரியவில்லை. சிலருக்கு எழுதுவதால் பெயர் புகழையும் சிலருக்கு அதனாலேயே இகழையும் கொண்டுவந்து சேர்க்கும் புதுமைப்பித்தன். சமயங்களில் பொருள் தெரியாத கவிதையைப் போல மருட்டும் மந்திரம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் இந்த உலகத்தை இயக்குவது போல, கணினியும் இந்த உலகத்தை இயக்குகிறது.
                      கை பேசியில் தொடங்கி கண்ணுக்கெட்டா வானில் திரியும் கோள்களையும் தொடர்பு கொள்ளும் அரசியல்வாதி இது. அறிவின் வளர்ச்சி பெருகப் பெருக, கணினி சொல்லும் கதைகளும் விரிவடைந்துள்ளன. ஒரு சின்ன சிப் 5000 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான தண்ணீரை தேவைப்படும் நேரத்திற்குத் தருவது ஒரு வியப்பு என்றால் காற்றிலிருந்து குடிநீரை வரவழைப்பது பெரு வியப்பு!
                      சமுதாயம் கணினி இல்லாமல் இருப்பது இனி மிகவும் கடினம்தான். பிறப்பு தொடங்கி முடிவு வரை இதன் ஆக்டொபஸ் கரங்கள் ஆதிக்கம் செய்கின்றன. ஆமாம் மொழி மொழி என்ற ஒன்று இருந்ததே அது என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா? அதுவும் இதன் வலைக்குள் சிக்கி வசப்படும். இனி எழுத வேண்டாம். நீங்கள் எதை பேசினாலும் அதை எழுத்து வடிவத்தில் கணினிக் கடவுள் தந்து விடுவார். அது சரி நீங்கள் சரியாகப் பேச வேண்டுமே! கவலை வேண்டாம். உங்கள் பேச்சைச் சரி பார்க்க அவரால் முடியாமல் போகுமா என்ன?




                      சரிதான் பேசுவதற்கும் சரி பார்த்தத்தைத் திருத்துவதற்கும் மூளை வேண்டுமே என்கிறீர்களா? விரைவில் அதையும் அவரே படைத்துத் தருவார் . நாம் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்களா? மூளைக்கு வேலை கொடுப்போம். கணினி செய்யும் வேலையைக் கண்காணிப்போம். அந்த ஒன்றையாவது நாம் செய்யலாமல்லவா!








செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

வெளிச்சம் தரும் விமானங்கள்

வெளிச்சம் தரும் விமானங்கள் 

கடற்கரையில் நிற்கும் ஒருவன் கையில் முயற்சியின்றியே முத்து கிடைத்தால் எப்படி இருக்கும்? அது அதிர்ச்சியா ? ஆனந்தமா ? தெரியாமல் சில நேரங்களில் காதில் வந்து விழும் சொற்கள் பல நாள்கள் நம்மைச் சிந்திக்க வைத்துவிடுகின்றன. தேடிப்போனாலும் சிக்காத ஞான ஒளி எதிர்பாராத நொடியில் பளிச்சிடும் போது நாமும் புத்தர்களாகிறோம். 
             கடந்த வாரத்தில் காதில் வந்து விழுந்த சொற்கள் இந்த வாரத்தில் என்னைக் கதைக்கச் செய்திருக்கிறது. மனிதன் யார்? மானுடன் யார்? மனித நேயம் எங்கே  போயிற்று?  நான் திருவிளையாடல் நாகேஷ் போலாகி கேட்கப் பதில் சொன்னவர் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள். 
           படைப்பில் எல்லோரும் மனிதர்களே. அவனுக்குக்  கிடைத்த  அற்ப வாழ்க்கை  வாய்ப்பில் பேரிடர் வந்த போது ஆதாயம் தேடும் அற்ப மகிழ்ச்சி, அடுத்தவர் மனம் புண் பட்டால் ஆனந்தம் , என்னைத் தவிர எவருக்கும் எதுவும் கிடைக்கக் கூடாது என்ற சுயநலம் எல்லாம் இணையும்  போது ஆறு அறிவு மனிதன் ஒரு அறிவு உயிருக்கும் கீழானவனாகிறான். உண்பதும் உறங்குவதும் தன்னலமாய் இயங்குவதும் மட்டும் இன்று மனிதனின் அடையாளங்களாகி விட்டது. 
        இயற்கை அனைவருக்கும் பொதுவாய்ப் படைத்த நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு எல்லாம் தனி உடைமைகளாகிவிட்டன. கிரேக்க புராணத்தில் வரும் வரம் பெற்ற மிடாஸ் தொட்டதெல்லாம் தங்கமானது. மனிதன் கண்ணில் பட்டதெல்லாம் பணம் ஆனது. ஓற்றைப் பிள்ளைகளெல்லாம் வீட்டுக் கொடுக்கும் குணம் பழக வாய்ப்பு கிடைக்காமல் சுயநலம் பழகிக் கெட்டுப் போயினர். ஒற்றைப் பிள்ளைகள் வந்ததெல்லாம் பெற்றோரின் தன்னலம் தந்த பரிசு. தன்னலம் தலை விரித்தால் பொதுநலம் போய் ஒளியும். விட்டுக் கொடுக்கத் தெரியாதவனே கெட்டுப்போகத் தெரிந்தவன் . பொதுவில் புகழ் பெற்றவர்கள் எல்லாம் ஐந்தில் ஒன்றாகவோ பத்தில் ஒன்றாகவோ பிறந்தவர்களே. 
          பணம் தந்த பகட்டு கண்ணை மறைக்கிறது. மானுடன் மனிதன் ஆனான். கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆனது. தன்னைப் போல் பிறரை  நேசிக்கும் மனம் கிடைத்துவிட்டால் மண்ணில் மனிதன் பிறப்பான் மனிதநேயம் மலரும். 
         வெளிச்சம் வெளியிலிருந்தும் வரும். நல்ல சான்றோர் சொற்கள் என்ற விமானங்களில். நன்றி தினமணி திரு.கி.வைத்தியநாதன் அவர்களுக்கு.
  

புதன், 6 ஜூலை, 2016

வலைப்பூக்களின் வலிமை


வலைப்பூக்களின்  வலிமை 

           சும்மா இருக்காமல் இணையத்தின் வலைக்குள் வலம் வந்த போது கண்ணில் பட்ட கட்டுரையின் ஒரு பகுதி தந்த சிந்தனையின் விளைவு  இது . பரந்த உலகத்தைச்  சுருக்கிப் பக்கங்களுக்குள் நிரப்பும் வித்தையைச்  செய்து கொண்டிருப்பவை வலைத்தளங்கள் . எல்லாப் பொருளும் இதன் பால் உள  இதன் பால் இல்லாப் பொருளும் இல்லையே என்பது வலைப்பூக்களுக்கே பொருந்தும் . 
         "எப்போதோ ஆரம்பித்த வலைப்பூவைக் கண்டுகொள்ளாது விட்டு விட்டுப் பின் திடீரென்று வந்த ஞானோதயத்தில் அதைத் திறந்து பார்த்தால்  அதில் வந்திருந்த பாராட்டுகள் .. என் மறதிக்கு ஒரு குட்டு  வைத்தன .  அதை விட அதிர்ச்சி அந்த வலைப்பூவில்  வந்த சில செய்திகளைப்  பயன்படுத்திக் கொள்ள விரும்பிய  ஒரு அன்பர் மின்னஞ்சல்  மூலம்  என்னைத் தொடர்பு கொண்டது" என்றிருந்த அந்த வரிகள் வலைப்பூக்களின் வலிமையை உணர்த்தின .
           கண்ணுக்குத்  தெரியாத அன்பர்களின் குட்டுக ளும்  கை குலுக்கல்களும் வலைப்பூக்களை வளர்க்கின்றன . யாரோ எழுதியதை படித்தது மாறி, என் எழுத்தை நானே வெளியிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. பயனுள்ள தகவல்கள் பகிரப்படுவதால் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களின் அலைச்சல்கள் குறைகின்றன. தொட்டால் தகவல் என்பது இதன் வரம் என்றால் தகவல் உண்மையா என்பது  இதன் சாபம். பல நேரங்களில்  பாதை மாறிப் போகும் அபாயமும் உண்டு. கலை ரசனை மிக்கவர்களுக்கு  வலைப்பூக்கள் வரப்பிரச்சாதம் தான்.. தேடினேன் வந்தது என்பதற்கு உதாரணமாகக்  கிடைத்த  அழகிய மலர்கள் உங்களுக்காக. 
கொக்கு ஆர்கிட் 
புறா ஆர்கிட் 
மனித ஆர்கிட் 


மீன் கொத்தி ஆர்கிட்














வெள்ளி, 13 மே, 2016

No 1



            வாங்க பேசலாம்! 


`ha;! vd;d clNd gha; nrhy;ypl;Lg; NghapLNtd;D epidf;fpwPq;fsh?  mnjy;yhk; elf;fhJ. GJrh xU Ntiyiaj; njupQ;Rf;fpwJy ,Uf;fpw Mu;tk; ngupatq;fSf;F mjpfkh ,Uf;fh? rpd;dtq;fSf;F mjpfkh ,Uf;fh? ,Jjhq;f ,d;dpf;F cq;fSf;fhd Nfs;tp! cq;f iyf;r vy;yhk; mDg;gp itAq;f. mij itr;Rg; gjpiy KbT gz;z KbAjhd;D ghf;fyhk;. Mdh vd;idf; Nfl;lh nguptq;f rpd;dtq;f vy;yhk; Rk;khg; Ngr;Rf;Fj;jhq;f! Mu;tk; ,Uf;fwtq;f mjpfkh fj;Jf;fwhq;f. ek;k tPl;L thz;Lfisg; ghUq;fNsd;. nfhQ;r Neuk; Rk;kh ,Uf;fhJ. vijahtJ gpr;R> gpupr;R> Njb> Mb> Xb filrpy xU KbTf;F te;jpUjh ,y;iyah? ,e;j gpy;lg;ngy;yhk; vJf;Fd;wPq;fsh? ,d;Dk; nuz;L ehs;s Nju;jy; tUJq;f. Xl;Lg; Nghlwjg;gj;jpAk; nfhQ;rk; Nahrpr;R itAq;f. ek;k Vupah kf;fis ehkNs njupQ;R itf;fiyd;dh vg;gb? Nahrpq;f!

,J xz;Zk; fy;ahz tpUe;J ,y;ypq;f! grpf;fhd rhg;ghL1 Ntz;lhk;D nrhd;dh vg;gTNk rhg;ghL fpilf;fhJ! ghj;Jr; nra;Aq;f!

 tpisahl;nly;yhk; ,Uf;fl;Lk;! rkPgj;Jy jfj;jfhaj; jkpo;kuGd;w NgUy xU fl;Liuiag; Gjpa jiyKiwapy gbr;Nrd;. Fk;gNfhzk; gf;fj;Jy ,Uf;fpw jhuhRuj;ijg; ghj;jNghJ ,ijtplg; nghUj;jkhd thu;j;ij vdf;Ff; fpilf;fy! xU rhz; msTf;Fs;s gps;isahu; njhg;igNahl ,Uf;fhU, md;dG+uzp efnky;yhk; ek;k ep[ ehk; khjpupNa ,Uf;F. J}Zf;Fj; J}z; nfhl;bf; fplf;F moF1 ntspehl;Lf;fhundy;yhk; Njb te;J ghf;fwhd;. ek;k ehl;Lf;rhuq;f ghf;fNyd;dh vg;gb? fy;Y nrhy;Y NgRJ Nghq;f! ,g;g tpLKiw tpl;lhr;R jhNd! KbQ;rh Nghap ePq;fSk; ghu;j;Jl;L thq;fNsd;!.